
நாகதீப விகாரையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய புத்தர் சிலைக்கு எதிரான பிரேரணையொன்று இன்று (12) வட மாகாண சபையில் முன்வைக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர் கனகரத்னம் என்பவரே இந்தப் பிரேரணையை சபையில் முன்வைத்துள்ளார். குறித்த புத்தர் சிலை நிர்மாணப் பணிகளை உடன் நிறுத்துமாறு வட மாகாண முதலமைச்சரிடம் அப்பிரேரணையில் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இருப்பினும், வட மாகாண சபையிலுள்ள ஆளும் கட்சி, எதிர்க் கட்சி என்பவற்றைச் சேர்ந்த பெரும்பாலானவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இதுபோன்ற பிரேரணைகள் மூலம் நாட்டில் இனவாதம் தூண்டப்படுவதாகவும் எதிர்க் கட்சி உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதனால், இது தொடர்பான விவாதம் முன்னெடுக்கப்படவில்லையெனவும் கூறப்படுகின்றது.
