கிருலப்பனை மே தினக் கூட்டம் எனது தலைமையில் - மஹிந்த



கிருலப்பனை மே தினக் கூட்டம் கூட்டு எதிர்க் கட்சியினால் எனது தலைமையில் இணைந்து மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
மஹிந்த ராஜபக்ஷவின் கால்ட்டன் இல்லத்தில் பெருநாள் வாழ்த்துத் தெரிவிப்பதற்கு இன்று முன்னாள் பிரதமர் தி.மு. ஜயரத்ன உட்பட பல அமைச்சர்கள் குடும்ப சகிதம் வருகை தந்திருந்தனர்.
இதன்போது ஊடகவியலாளர்கள் மஹிந்த ராஜபக்ஷவிடம் மே தினக் கூட்டத்துக்கு வருகை தருவதாக தினேஷ் குணவர்தன அறிவித்திருந்தமை குறித்து வினவினர். இதற்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.