எம்.ஆர். லதீப் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரானார்



பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள் இருவர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். 

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் இந்த பதவி உயர்வுகள் வழங்கப்பட்டிருப்பதாக பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாஸ குரே கூறினார். 

காலி வலயத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் எஸ்.ஏ.டீ.எஸ் குணவர்தன மற்றும் பயிற்சிப் பிரிவிற்கு பொறுப்பான எம்.ஆர். லதீப் ஆகிய இருவரே இவ்வாறு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். 

அதன்படி ஏப்ரல் மாதம் 16ம் திகதி முதல் எஸ்.ஏ.டீ.எஸ் குணவர்தனவின் பதவி உயர்வு அமுலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எம்.ஆர். லதீபின் பதவி உயர்வு ஏப்ரல் மாதம் 20ம் திகதி முதல் அமுலாகும் என்று பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் கூறினார். 

இதுதவிர பொலிஸ் அத்தியட்சகர்கள் இருவர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். 

நிதி மோசடி விசாரணைப் பிரிவில் பணியாற்றும் பொலிஸ் அத்தியட்சகர் சி.ஏ. பிரேமசாந்த 2012ம் ஆண்டு ஜூன் மாதம் 07ம் திகதி முதல் அமுலாகும் வகையில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார். 

பொலிஸ் பாதுகாப்பு பிரிவின் பொலிஸ் அத்தியட்சகர் எச்.எச்.சுலசிறி 2014ம் ஆண்டு ஜனவரி 14 முதல் அமுலாகும் வ​கையில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாஸ குரே கூறினார்.