துருக்கி நாட்டின் பர்சா (Bursa) நகரில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 13 பேர் காயமடைந்துள்ளனர். 14ஆம் நூற்றாண்டின் பெரும் பள்ளிவாசல் எனக் கருதப்படும் பகுதியில் இந்த தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக பர்சா நகரப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு இவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்தத் தற்கொலைத் தாக்குதலை பெண் ஒருவரே நடத்தியிருப்பதாகவும், இத்தாக்குதலுக்கான பொறுப்பை இதுவரை எந்தவொரு ஆயுத அமைப்பும் ஏற்கவில்லை எனவும் தெரியவந்துள்ளது.

