தன்னிறைவான நாடாக பிரார்த்திக்கின்றார்- மஹிந்த




இராணுவத்தினர் தனது உயிரைத் தியாகம் செய்து நாட்டுக்கு சுதந்திரத்தைப் பெற்றுத் தந்ததனால் தான் அச்சம், பயம் இன்றி நாட்டு மக்கள் இன்று புத்தாண்டைக் கொண்டாட முடிந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தனது முகநுால் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ள வீடியோவில் இவ்வாறு கூறியுள்ளார்.
இந்த சிங்கள, தமிழ் புத்தாண்டு தினத்தில் இலங்கை ஒரு தன்னிறைவான நாடாக மாறுவதற்கு பிரார்த்திப்போம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.