பெண் கைது, 40 லட்சம் பெறுமதியான தங்க நகை அரசுடமை



தனது பிரயாணப் பையில் 40 லட்சம் ரூபா பெறுமதியான தங்க  நகைகளை எடுத்துக் கொண்டு இந்தியா செல்ல முற்பட்ட பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்கத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரான இவர் கொழும்பை வசிப்பிடமாக கொண்டவர் என தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு கைப்பற்றப்பட்ட பொருட்களில் தங்க பிஸ்கட் மற்றும் நகைகள் என்பன காணப்படுவதாக சுங்க அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட தங்கம் அனைத்தும் அரசுடமையாக்கப்பட்டதுடன், சந்தேகநபருக்கு ஒரு லட்சம் ரூபா தண்டப் பணமும் விதிக்கப்பட்டதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.