புத்தளம் மாவட்ட (பா.உ) சரத் நிஷாந்த பயணித்த வாகனம் விபத்து



ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சரத் நிஷாந்த பயணித்த வாகனம் சற்று முன்னர் குருநாகல், யன்தம்போலாவ பிரதேசத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் சரத் நிஷாந்த பயணித்த கேப் வாகனம் பாதையை விட்டு விலகி அருகிலிருந்த மற்றுமொரு வாகனத்தில் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
விபத்தில் மேலும் சிலர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த பாராளுமன்ற உறுப்பினர் சரத் நிஷாந்த சிகிச்சைகளுக்காக குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.