கடந்த எட்டு நாட்களில் இடம்பெற்ற விபத்துக்களில் 53 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
கடந்த 10 ஆம் திகதி முதல் இன்று (17) வரை இந்த உயிரிழப்பு இடம்பெற்றுள்ளதாகவும், இதில், 17 வயதுக்குட்பட்ட பிள்ளைகள் ஐந்து பேர் காணப்படுவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.