வைத்திய பரிசோதனையில் ஆஜராகுமாறு மலிங்கவுக்கு அழைப்பு



இலங்கை அணி வீரர் லசித் மாலிங்கவை எதிர்வரும் புதன்கிழமை (20) இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் நியமிக்கப்பட்ட விஷேட மருத்துவக் குழுவின் முன் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
நடைபெற்று வரும் ஐ.பி.எல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் சார்பில் பங்கேற்பதற்காக, மலிங்க கடந்த வௌ்ளிக்கிழமை இந்தியா சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
என்றாலும் தான் இந்தியாவுக்கு செல்லவில்லை என லசித் மாலிங்க சிங்கள ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். அதேவேளை தான் இந்தியாவுக்கு சென்று மும்பை இந்தியன்ஸ் அணியுடன் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக வதந்திகள் பரப்பபடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், இந்திய வீரர் ஹர்பஜான் சிங் உடன் லசித் மாலிங்க பயிற்சியில் ஈடுபட்டுள்ள புகைப்படம் ஒன்று நேற்று மும்பை இந்தியன்ஸ் டுவிட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.