வெளிநாட்டு கிரிக்கெட்டை சந்திக்க தயாராகும் இலங்கை ஆதிவாசிகள்



வெளிநாடுகளிலுள்ள ஆதிவாசிகளுடன் கிரிக்கெட் விளையாடுவதற்கு தங்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்தித் தருமாறு இலங்கை ஆதிவாசிகள் விளையாட்டுத் துறை அமைச்சிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அத்துடன், அரசாங்கத்திலுள்ள அமைச்சர்களுடன் தாங்கள் கிரிக்கெட் போட்டியை நடாத்த தயாராகவுள்ளதாக ஆதிவாசிகளின் கிரிக்கெட் குழுத் தலைவரும் தம்பான ஆதிவாசிகளின் உரிமைகளுக்கான மத்திய நிலையத்தின் பிரதானியுமான ஊருவரிகேலாகே ஹீன்பண்டா அத்தோ தெரிவித்துள்ளார்.
தாங்களுக்கான போட்டி நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதற்கு அரசாங்கமோ, தனியார் நிறுவனங்களோ முன்வருமாயின் அதனையிட்டு தாங்கள் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், தங்களது கிரிக்கெட் துறையில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து தருமாறு விளையாட்டுத் துறை அமைச்சரிடம் மஜகர் ஒன்றை கையளிக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.