பொது நிறுவனங்கள் தொடர்பில் கண்காணிப்பை மேற்கொள்ள அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழு (கோப்)வின் கூட்டங்கள் நடைபெறும் போது, அதில் கலந்துகொள்வதற்கு சட்ட மா அதிபரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவரை நியமிக்குமாறு அக்குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹதுன்னெத்தி, சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாட்டின் சட்டத்தை மீறி அரசியல் யாப்புக்கு முரணாக செயற்படுபவர்களை கோப் குழுவுக்கு அழைத்து விசாரணை நடாத்தி சட்டத்தின் முன் நிறுத்துவதற்கே சட்ட மா அதிபரின் பிரதி நிதி அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

