ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டத்துக்கு இதுவரையில் தனக்கு அழைப்புக் கிடைக்கவில்லையென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இருப்பினும், கூட்டு எதிர்க் கட்சியினால் கிருலப்பனையில் ஏற்பாடு செய்துள்ள மே தினக் கூட்டத்துக்கு தான் அழைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டத்துக்கு தங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டால், செல்வீர்களா? என ஊடகவியலாளர் ஒருவர் அவரிடம் வினவியதற்கு,
“தான் கூட்டு எதிர்க் கட்சியின் மே தினக் கூட்டத்தை பொறுப்பேற்றிருக்கின்றேன்” என பதிலளித்துள்ளார். கண்டியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

