கொழும்பு மாநகர சபைக்கு எதிராக ஐந்து முக்கிய குற்றச்சாட்டுகளை கொண்ட குற்றச்சாட்டுப் பத்திரமொன்றை மேல்மாகாண சபை முன்வைத்துள்ளது.
மேல்மாகாண முதலமைச்சர் இசுர தேவப்பிரிய குறித்த குற்றச்சாட்டுப் பத்திரத்தை நேரடியாக தனது முதலமைச்சு அலுவலகத்தின் ஊடாக முன்வைத்துள்ளார்.
கொழும்பு மாவட்டத்தின் சில பிரதேசங்களில் குப்பை அகற்றுதல் தொடர்பான டெண்டர் மோசடி, கொழும்பு நகர எல்லைக்குள் அமைந்துள்ள வீடுகளுக்கு இலக்கத் தகடு பொருத்துதல் தொடர்பான டெண்டர் மோசடி, உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாகவே குறித்த குற்றச்சாட்டுப் பத்திரம் முன்வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பதினாறு எழுத்து வடிவ சாட்சியங்களும், 11 சாட்சிகளும் முன்னிறுத்தப்பட்டுள்ளனர்.

