ஒரே நாளில் ஒரே இடத்தில் இரு திருமணங்கள்; குடும்பங்கள் மோதல்



குவாங்ஸி பிராந்தியத்தில் லின் மற்றும் கி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஒரே நாளில் திருமணங்களுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
ஒரு நெரிசலான, குறுகிய சாலையில் இருவேறு இடங்களில் இந்த கல்யாணங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆனால், இம்மாதிரி ஒரே நாளில் இரு திருமணங்கள் நடப்பது நல்லதல்ல என இரு குடும்பத்தினரும் கருதினர்.
திருமண ஊர்வலம் அந்தச் சாலை வழியாகச் சென்றபோது, ஒரு தரப்பு மற்றொரு தரப்புக்கு வழிவிட மறுத்தது.
லின் தரப்பினர் ஏற்கனவே அலங்கார வளைவை செய்துவைத்திருந்த நிலையில், அதன் வழியாக கி தரப்பினரின் ஊர்வலம் செல்லத் துவங்கியதும் மோதல் வெடித்தது.
இதையடுத்து திருமணத்திற்கு வந்தவர்கள் கத்திகளை வைத்தும் திருமணத்திற்கு வாங்கிய பட்டாசுகளை வைத்தும் மோதிக்கொண்டனர்.
இதன் பிறகு வந்த காவல்துறையினர் பலரைக் கைதுசெய்தனர். உயிர்ச் சேதம் ஏதும் ஏற்படவில்லை.
இரு தரப்பு திருமணங்களும் நடந்ததா என்பது குறித்து தகவல் ஏதும் இல்லை.