கவனம்! குடிபோதையில் வாகனங்களைச் செலுத்துகின்றனர்.



குடிபோதையில் வாகனங்களை செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் விஷேட வேலைத்திட்டத்தின் கீழ் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் 254 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

கைது செய்யப்பட்டவர்களுள் அதிகமானவர்கள் மோட்டார் சைக்கிள் சாரதிகள் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறினார். 

அதன்படி மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்கள் 135 பேர் நேற்றைய தினம் மாத்திரம் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இதுதவிர முச்சக்கர வண்டி சாரதிகள் 85 பேர், லொறி சாரதிகள் 07 பேர், கார் சாரதிகள் 10 பேர் மற்றும் வேன் சாரதிகள் 05 பேரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார். 

புத்தாண்டு காலத்தில் குடிபோதையில் வாகனங்களை செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் விஷேட நடவடிக்கைளை கடந்த 10ம் திகதி பொலிஸார் ஆரம்பித்தனர்.