(இர்சாத்)
தேசிய காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான அதாவுல்லா நாளை காலியில் இடம்பெறும் ஜனாதிபதி தலைமையிலான மே தினத்தில் கலக்கவுள்ளார் எனத் தெரிகின்றது.
இது தொடர்பில் தேசிய காங்கிரஸ் தீர்க்கமான முடிவுக்கு வந்துள்ளதாக உத்தியோகப் பற்றற்ற தகவல் தெரிவிக்கின்றது.
மஹிந்த ராஜபக்சவின் வெற்றிக்காக உழைத்த அதாவுல்லா மஹிந்தவின் தோல்விக்குப் பின் கொலன்னாவயில் வசித்து வந்தார். ஓரிரு சந்தர்ப்ஙகள் தவிர, அவர் அக்கரைப்பற்றில் காண்பது அரிதானது.
கடந்த பாராளுன்றத்தில் தோற்றவுடன் சென்ற மீண்டும் கொலன்னாவை சென்றவர்> தேசிய காங்கிரஸ் மாநாட்டுக்கென மாத்திரம் அக்கரைப்பற்றுக்கு கடந்த மீண்டும் வந்திருந்தார்.
அவரது அரசியல் மீள் வருகையினை எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலின் மூலம் உறுதிப்படுத்தும் நோக்கில், திருமண வீடுகள், மரண வீடுகளுக்குச் சென்று, .இழந்து போன வாக்காளர்களை சந்தித்து குசலம் விசாரித்தும் வருவதாக அரசியல் அவதானிகள் எதிர்வு கூறுகின்றனர்.இதனுடைய வெளிப்பாட்டின் மையமாக நாளை ஜனாதிபதி மைத்திரியுன் கைகோர்க்கவுள்ளார்.
.

