நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான திரு.முத்து சிவலிங்கம் சுகவீனம் காரணமாக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் இன்று மாலை அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இன்று நுவரெலியாவில் நடைபெற்ற மேதின கூட்டத்தில் கலந்து கொண்டு பிறிதொரு கூட்டம் ஒன்றுக்கு அவசரமாக செல்ல வேண்டும் என கோரி மகிழ்ச்சியுடன் விடைபெற்றுச் சென்ற அவர், மாலை நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்கு சென்ற நிலையில் மாரடைப்பு நோய் ஏற்பட்டிருப்பதாக தெரியவந்ததையடுத்து அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.

