பாதிக்கப்பட்டுப் போயுள்ள காத்தான்குடி பொது விளையாட்டு மைதான புனரமைப்பிற்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் 2 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-
பாதிக்கப்பட்டுப் போயுள்ள காத்தான்குடி பொது விளையாட்டு மைதான புனரமைப்பிற்கு 20 இலட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செயயப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் ஞாயிறன்று தெரிவித்தார்.
கடந்த காலங்களில் தேர்தல் பிரச்சாரத்திற்காக முறையற்ற விதத்தில் பாவிக்கப்பட்டதனால் மைதானம் குன்றும் குழியுமாகிப் பாதிக்கப்பட்ட நிலையில் கைவிடப்பட்டிருந்தது.
காத்தான்குடி பிரதேசத்தில் காணப்படுகின்ற ஒரேயொரு பொது விளையாட்டு மைதானமான இதனைப் புனரமைக்க மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸிடம் முன்வைத்த வேண்டுகோளுக்கமைவாக 2,000,000.00 ரூபா நிதி ஒதிக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அந்த விளையாட்டு மைதானத்தின் தற்போதைய நிலைமைகளை நேரில் பிரதேச செயலாளர் மற்றும் அதிகாரிகள் சகிதம் நேரில் சென்று பார்வையிட்ட சிப்லி பாறூக் பொது மைதானத்தின் புனரமைப்பு வேலைகளை உடனடியாக ஆரம்பித்து அடுத்து வரும் மூன்று மாத காலங்களுக்குள் அவ்வேலைகளை நிறைவு செய்து விளையாடத் தகுதியான முறையில் தயார்படுத்துமாறு அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டார்