On 28 July 2010, through Resolution 64/292, the United Nations General Assembly explicitly recognized the human right to water and sanitation and acknowledged that clean drinking water and sanitation are essential to the realisation of all human rights.May 29, 2014
அம்பாரை கொண்டுவட்டுவான் நீர்த்தேக்கப் பம்பி மூலம் கொன்டுவரப்படும் நீரானது அக்கரைப்பற்று பிராந்திய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை மூலம் வினியோகிக்கப்படுகின்றது. இதில் இது வரை சுமார் 15 000 இணைப்புக்கள் உள்ளன.இவ் இணைப்புக்களின் மூலமான நீர் அக்கரைப்பற்று தைக்கா மையவாடியிலிருந்து பணங்காடு வரைக்கும், பட்டியடிப்பிட்டி முதல் பள்ளிக்குடியிருப்பு பிரதேசங்களுக்கும் வினியோகிக்கப்படுகின்றது.
கொண்டுவட்டுவானிலிருந்து பள்ளிக்குடியிருப்பு நீர்தாங்கி மூலமாக நுகரப்படும் நீரை வடிதாங்கியில் இட்ட போது செறிந்த சேறும்,சகதியும், காவியும் கொண்ட நீரையே காணக் கிடைக்கின்றது. எல்லோர் வீட்டிலும் Water Filter or Purification இருப்பது கிடையாது. அதுவும் பாமர மகனால் வாங்கவும் முடியாது.
காவி கலந்த நீர் வரக் காரணம் என்னவென்று கேட்டால், சுத்திகரிபு்புச் செய்து ஒரு வருடத்தினைத் தாண்டுகின்றது என பெயர் குறிப்பிட விரும்பாத ஊழியர்கள் உரைக்கின்றனர்.
நீர் தாங்கியினைச் சுத்தம் செய்வதென்றால் நீரை நிறுத்த வேண்டுமாம் பொது மக்கள் பாதிக்கப்பபடுவார்களாம் என்று காரணம் கற்பிக்கின்றனர் சிலர்.
நாட்டின் சுத்தமான நீரைப் பருகுவதற்கு மக்கள் பணத்தினை வாரி இறைக்க, அதில் வயிறு வளர்த்துக் கொண்டிருக்கும் அதிகாரிகளின் அசமந்தப் போக்கு இதன் பிரதான காரணம்.
சுத்தமான குடிநீரை வழங்கவேண்டியதும் நுகர வேண்டியதும் ஒவ்வொரு மனிதனும் அடிப்படை உரிமையுமாகும்.
அக்கரைப்பற்று பிராந்திய நீர் வழங்கல் முகாமையாளா் இது பற்றிக் கரிசனை எடுக்கவே இல்லை.எடுத்திருந்தால் தீழ்ப்படைந்த நீர் மக்களை வந்தடைந்திருக்காது. இது பொது மக்களின் உயிருக்கு உலைவைக்கும் விடயம் என்பதை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உணரவும் வேண்டும்.
நீர் வழங்கல்,நீர் முகாமைத்துவ அப்துல் றவுப் ஹக்கீம் அமைச்சரே!
இது உங்கள் கவனத்திற்கு

