களனி ஆற்றின் நீர்மட்டம் பாரியளவில் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாகலகம வீதியில், தற்பொழுது நீர் மட்டம் 7 அடி உயர்ந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இது பாரிய வெள்ள நிலைமை என கொழும்பு வலயப் பொறுப்பாளர் பொறியியலாளர் பீ,கே பத்மகீர்த்தி தெரிவித்துள்ளார்.
களனி ஆற்றின் தாழ்நிலப் பகுதிகளில் வசிப்பவர்கள் அவதானத்துடன் இருக்குமாறும் பொறியியலாளர் பீ,கே பத்மகீர்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதேவேளை கொழும்பில் பல பிரதேசங்களில் மின் தடைபட்டுள்ளது.

