இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் புதிய கட்சியொன்றை உருவாக்க தீவிர முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் அந்த நடவடிக்கை உடனடியாக நிறுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து பிளவுபட்டுள்ள உறுப்பினர்களை இணைத்துக் கொண்டு கூட்டு எதிர்க்கட்சியினர் என தம்மை அடையாளப்படுத்திய குழுவினர் புதிய அரசியல் கட்சியை உருவாக்கவுள்ளனர்.
இவ்வாறான சூழ்நிலையில் புதிய அரசியல் கட்சி ஒன்றை உருவாக்குவதற்கு அவசரப்பட வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம், ஜனாதிபதி மைத்திரி கேட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர் ஊடாக இந்த அறிவிப்பினை ஜனாதிபதி விடுத்துள்ளார்.
மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை மீண்டும் நியமிக்க கூடாதென அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து, எந்தவிதமான முன்னறிவிப்பும் விடுக்காமல் பாரிய மக்கள் கூட்டத்துடன் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. கூட்டு எதிர்க்கட்சியினர் இதனை நேற்று முன்தினம் ஏற்பாடு செய்திருந்தனர். இதன்போது வன்முறை சம்பவங்கள் இடம்பெற்றதுடன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் காயங்களுக்கும் உள்ளானார்கள்.
இந்த சம்பவம் தொடர்பில் அதிருப்பதி அடைந்த ஜனாதிபதி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களை தனது வீட்டிற்கு அழைத்து, விசாரணை நடத்தினார்.
இதன்போது மஹிந்த ராஜபக்சவின் தலைமைத்துவத்தில் புதிய கட்சி அமைப்பதில் தாமதம் ஏற்படுவதாகவும், கூட்டு எதிர்க்கட்சியினருக்குள் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகளே இதற்கு காரணம் என ஜனாதிபதியிடம் தெரிவிக்கப்பட்டது.
மஹிந்தவின் செயற்பாடு கட்சிக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிளவுபடுத்தி. புதிய கட்சியை அமைக்கும் மஹிந்தவின் முயற்சிக்கு அனுமதியளிக்க முடியாது என ஜனாதிபதி கடுத்தொணியில் குறிப்பிட்டுள்ளார்.
புதிய கட்சியை உருவாக்க மஹிந்தவை அவசரப்பட வேண்டாம்... என கூறுமாறு ஜனாதிபதி கேட்டுள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தில் இடம்பெற்ற மத்திய செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்க கூடாதென தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நிறைவேற்று ஜனாதிபதி அதிகாரத்தை முழுமையாக நீக்காமல், தேர்தல் முறையில் மாற்றங்களை மேற்கொள்வது தொடர்பாகவும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
இவ்வாறு தொடர்ந்து மஹிந்தவுக்கு தாமதித்துக் கொடுத்தால் மைத்திரி தவிர்க நேரிடலாம் என்கின்றது மஹிந்த தரப்பு

