அரசாங்கம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள கடன் வரையறையை மீறி கடன் பெற்றுள்ளதாகவும், இது தொடர்பில் நிதி அமைச்சின் வருடாந்த அறிக்கையில், கணக்காய்வாளரால் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், பாராளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
மேலும், அரசாங்கம் பெற்ற கடன் 100 வீதத்தை தாண்டியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பத்தரமுல்லையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
17,80,000 மில்லியன் ரூபாவை கடனாக பெறவே பாராளுமன்றம் அரசாங்கத்திற்கு பரிந்துரைத்துள்ளதாகவும், ஆனால் அரசாங்கம் இதுவரை 35,49,805 மில்லியன் ரூபாவை கடனாக பெற்றுள்ளது, எனவும் விஜித்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.