சாலாவ இராணுவ முகாம் வெடிப்புச் சம்பவத்துடன் தொடர்புற்ற தீ, அதிகாலை 1.30 அளவில் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. பாதுகாப்பற்ற வலயம் 500 மீ ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதனால், சாலாவ இராணுவ முகாம் வெடிப்புச் சம்பவத்தில் அப்பிரதேசம் புகைமண்டலமாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று அப்பிரதேசத்தில் மழை பெய்தால் அப்புகை மண்டலத்தில் காணப்படும் நச்சுப் பதார்த்தங்கள் நீருடன் கலக்கும் வாய்பு இருப்பதாக சுகாதாரப் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதனால், அப்பிரதேசத்திலுள்ள மக்கள் தங்களது கிணறுகளை மூடி வைக்குமாறு சுகாதார அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Post a Comment
Post a Comment