கொஸ்கம சலாவ தீ விபத்தில் ஒருவர் மரணம்



கொஸ்கம சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட திடீர் தீயை கட்டுப்படுத்த முற்படுவதாக இராணுவத் தளபதி கிரிஷாந்த டி. சில்வா தெரிவித்துள்ளார்.
இராணுவத்தின் பயிற்றப்பட்ட தீயணைப்பு படையினர் குறித்த பகுதியில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், இன்னும் ஒரு சில மணி நேரங்களில் தீயை முற்றாக கட்டுப்படுத்த முடியும் என அவர் மேலும் தெரிவித்தார். எனினும் இது தொடர்பாக சரியான ஒரு நேரத்தை தெரிவிக்க முடியாது என இராணுவத் தளபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, குறித்த பகுதியில் சேதம் தொடர்பாக விபரம் திரட்ட இராணுவப் படையினரை ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுத்தியுள்ளதாக இராணுவத் தளபதி மேலும் தெரிவித்தார்.
குறித்த சம்பவத்தால் மூவர் அவிசாவளை ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதில் ஒருவர் கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
சாலாவ இராணுவ முகாம் தீ விபத்தில் தற்பொழுது வரை மூவர் அவிசாவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் ஒருவர் கண்டி வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரச் சேவை பணிப்பாளர் டாக்டர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.
தற்பொழுது தீயினால் ஏற்படும் வெடிப்புச் சப்தங்கள் குறைந்துள்ளதாக அப்பிரதேச செய்திகள் மேலும் குறிப்பிடுகின்றன.