(க.கிஷாந்தன்)
கொட்டகலை மேபீல்ட் தோட்டத்தில் கடந்த காலங்களில் மண்சரிவு அபாயத்தினால் பாதிக்கப்பட்ட 16 குடியிருப்பாளர்களுக்கு புதிய வீடுகளை அமைத்துக்கொடுக்க 17.06.2016 அன்று பிற்பகல் வைபவ ரீதியாக அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.
இவ் அடிக்கல்லை மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் சுப நேரத்தில் நாட்டி வைத்தார்.
இவ் வைபவத்தில் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான எம்.உதயகுமார், சோ.ஸ்ரீதரன், சிங் பொன்னையா, ஆர். ராஜாராம், மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் ஏ. லோறன்ஸ் என பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டதை படங்களில் காணலாம்.


Post a Comment
Post a Comment