இந்தோனேசியா அதிகாரிகள் 40க்கும் மேற்பட்ட தமிழ் குடியேறிகள் அடங்கிய படகு ஒன்றை கடலுக்குள் இழுத்துச் செல்ல தயராகி வருகிறன்றனர்.
இலங்கையில் இருந்து வந்துள்ளதாகக் கருதப்படும் இவர்களில் ஒன்பது குழந்தைகளும் ஒரு கர்ப்பிணி பெண்ணும் அடங்குவர். அவர்களின் படகு இந்தோனேசியாவின் அச்சே மாகாணத்தில் இயந்திர கோளாறு காரணமாக நின்றுவிட்டது.
இந்த குடியேறிகள் பல நாட்களுக்கு முன்பு மீட்கப்பட்டனர்.கடற்கரைக்கு அருகே ஆழமற்ற கடல் பகுதிக்கு அந்த படகை அதிகாரிகள் இழுத்து வந்து அதன் மோட்டாரை சரி செய்ய உதவினாஇந்த குடியேறிகள் ஆஸ்திரேலிய பிரதேசத்தை சேர்ந்த கிறிஸ்துமஸ் தீவை அடையும் முயற்சியில் கடந்த ஒரு மாதமாக கடலில் பயணித்துள்ளனர்.
இந்தோனேசியாவின் துணை அதிபர் ஜூஸுப் கல்லா மாகாண அதிகாரிகளிடம் குடியேறிகளை தற்காலிகமாக கரையிறங்க அனுமதிக்குமாறு வலியுறுத்தி வருகிறார்.


Post a Comment
Post a Comment