இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சிவப்பு சந்தன மரக்குற்றிகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கற்பிட்டி கடற்படை முகாமிலுள்ள அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பில் லொறியொன்றில் ஏற்றிச் செல்லப்பட்ட 179 சந்தன கட்டைகள் மீட்கப்பட்டுள்ளன.
இதன்போது சந்தன கட்டைகள் ஏற்றிச் செல்லப்பட்ட லொறி கடற்படையால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட லொறியில் இருந்த மேலும் நான்கு பேர் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட சந்தன மரக்குற்றிகளின் பெறுமதி இதுவரை கணிக்கப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.

