இடைக்கால கொடுப்பனவு இன்னுமில்லை



(கிசாந்தன்)
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட 2500 ரூபா இடைக்கால கொடுப்பனவு தமக்கு இன்னும் கிடைக்கவில்லையென தெரிவித்து தலவாக்கலை சென் கூம்ஸ் தோட்ட மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேயிலை ஆராய்ச்சி நிலையம் அமைந்துள்ள தலவாக்கலை சென் கூம்ஸ் தோட்ட தொழிலாளர்கள் இன்று நண்பகல் முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டதோடு தோட்ட காரியாலயத்திற்கு முன்னால் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 2500 ரூபாய் இடைக்கால கொடுப்பனவு தமக்கு இதுவரை வழங்கப்படவில்லை எனத் தெரிவித்தே தோட்ட மக்களினால் இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டது.
பின்னர் தோட்ட முகாமையாளர் இதுதொடர்பில் உரிய தரப்பினருடன் கலந்துரையாடி சிறந்த முடிவைத் தருவதாக தெரிவித்தன் பின்னர் ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.