ஆய்வு கூடம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு



காலி மல்ஹறுஸ் சுல்ஹியா தேசிய பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள புதிய தொழில்நுட்ப ஆய்வு கூடம் ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்டது.
புதிய தொழில்நுட்ப ஆய்வு கூடத்தை திறந்து வைத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பின்னர் அதனைப் பார்வையிட்டார்.
அதனையடுத்து ஜனாதிபதி பாடசாலையில் மரக்கன்று ஒன்றையும் நாட்டிவைத்தார்.
இதேவேளை தடெல்ல பியதிகம வாராந்த சந்தையையும் ஜனாதிபதி திறந்து வைத்தார்.