மூதூரில் எரிந்த நிலையில் குடும்பத்தவரது சடலங்கள்




திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலிம்நகர் பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து  எரிந்த நிலையில் ஆணொருவரினதும் பெண்ணொருவரினதும் சடலங்களை இன்று திங்கட்கிழமை (10) காலை மீட்டுள்ளதாக  மூதூர் பொலிஸார்  தெரிவித்தனர்.

ஜுனைதீன் ஆயிஷா (25 வயது), காமீல் பைரூஸ் (32 வயது) ஆகியோரே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் உயிரிழந்த ஆண், ஏற்கெனவே மூன்று திருமணங்கள் முடித்து அத்திருமண உறவுகளை முறித்து வாழ்ந்து வந்துள்ளார்.

அத்தோடு சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணும் கணவருடனான தொடர்பினை முறித்து உயிரிழந்த நபருடன் தொடர்பினை ஏற்படுத்தி வாழ்ந்து வந்த நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது