FCIDக்கு எதிராக நாமல் வழக்கு



பொலிஸ் நிதிக்குற்றப் புலனாய்வு பிரிவிடம் 200 மில்லியன் ரூபாய் நட்டஈடு கோரி, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, கொழும்பு மாவட்ட நீதிமன்றில் வழக்கொன்றை இன்று திங்கட்கிழமை தாக்கல் செய்துள்ளார்.
கிறிஸ் நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் ஒப்பந்தத்துடன் தொடர்புள்ளதாகக் கூறி தன்னை கைதுசெய்தமை குறித்து அவர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
கைதுசெய்யப்பட்டமை காரணமாக தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாகவும்  ஆதாரமற்ற குற்றச்சாட்டு, தன்னை கைதுசெய்ய காரணமாகியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.