இலஞ்ச ஊழல்கள் ஆணைக்குழுவின் புதிய பணிப்பாளராக மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல் சரத் ஜெயமன்னே நியமிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி சட்டத்தரணியான இவர் சட்டமா அதிபர் திணைக்களத்தின் 6ஆவது சிரேஸ்ட உறுப்பினர் என்பதுடன், உயர்நிலை குற்றவியல் சட்டத்தரணியுமாவார்.
இலஞ்ச ஊழல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளராக இருந்த திலுக்ஸி விக்ரமசிங்க கடந்த ஒக்டோபர் மாதம் 17ஆம் திகதி பதவி விலகினார்.
காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட வழக்கிலும் இவர் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

