ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, கூட்டு எதிர்க்கட்சியின் அங்கமா?



எமது ஸ்ரீலங்கா சுதந்திர முன்னணி என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள அரசியல் கட்சியின் பெயர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என மாற்றப்பட்டு, அதன் தலைவராக பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் பெயரிட்டுள்ளதாக தேர்தல் செயலகத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இந்த கட்சியின் செயலாளராக சட்டத்தரணி சாகர காரியவசம் செயற்பட்டு வந்துள்ளதுடன், கட்சியின் சின்னமாக மலர் மொட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
பழைமை வாய்ந்த இந்த கட்சி 2015ஆம் ஆண்டு எமது ஸ்ரீலங்கா சுதந்திர முன்னணி பெயர் மாற்றப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
இலங்கையில் பதிவு செய்யப்பட்டுள்ள 64 கட்சிகளில் இந்த கட்சியும் ஒன்று என்பதனை அவர் இதன்போது சுட்டிக்காட்டியிருந்தார்.
இதன்பிரகாரம், எமது ஸ்ரீலங்கா சுதந்திர முன்னணி என்ற கட்சியின் பெயர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என பெயர்மாற்றப்பட்டுள்ளது.
எனினும், இந்த கட்சி கூட்டு எதிர்க்கட்சியுடன் இணைகின்றமை குறித்து தமக்கு எந்தவித தகவல்களும் தெரியாது என அவர் சுட்டிக்காட்டினார்.
பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸை தவிர, கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் எந்தவொரு நபரும் இந்த கட்சியின் அங்கத்துவத்திற்கு பெயரிடப்படவில்லை எனவும் அவர் கூறியிருந்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கான தமிழ் பெயரொன்று பிரேரிக்கப்படவில்லை எனவும், அந்த கட்சியை உத்தியோகப்பூர்வமாக  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்றே அழைக்க வேண்டும் எனவும் தேர்தல் செயலகத்தின் உயர் அதிகாரி எமது செய்தி பிரிவிற்கு கூறியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்க விடயமாகும்.