காரைதீவு விபுலாநந்த மத்திய கல்லூரியின் பழைய மாணவர்கள் சங்கத்தினரால் இவ்வாண்டு க.பொ.த.(சா.த) பரிட்சை எழுதவிருக்கும் பாடசாலை மாணவர்களுக்கு கல்விக்கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்பட்டது.
முதலாவதாக ஆங்கிலப்பாடம் கல்முனை கார்மேல் பற்றிமா பாடசாலையில் கற்பிக்கும் திருமதி.கல்பனா அருண் மற்றும் திருமதி.தேவதர்ஷிகா அமிர்தானந்தன் ஆகிய ஆசிரியர்களால் நடாத்தப்பட்டது.
கணிதபாட கருத்தரங்கு கல்முனை கார்மேல் பற்றிமா பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர் ந.டினேஸ்குமார் மற்றும் களுவங்கேணி மகா வித்தியாலய ஆசிரியர் ந.நிசாந்தன் அவர்களினால் நடாத்தப்பட்டது.
விஞ்ஞான பாடமானது கல்முனை ஸாகிரா கல்லூரி ஆசிரியர் அன்றனிபயஸ் அவர்களினாலும் தமிழ்பாடம் காரைதீவு சண்முக மகாவித்தியால ஆசிரியர் திருமதி.ஜெயமதி சந்திரசேகரம் ஆசியை அவர்களினாலும் சிறப்பாக இடம்பெற்றது.

