பொலிஸ் விசேட அதிரடிப் படையின் முன்னாள் கட்டளைத் தளபதி, பிரதிப் பொலிஸ் மாஅதிபர் கே.எம்.எல்.சரத்சந்திர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
10 இலட்சம் ரூபா 10 இலட்சம் ரூபா சரீரப் பிணைகள் இரண்டில் விடுவிக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலப்பிடிய உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அரசுக்குச் சொந்தமான வாகனத்தை துஷ்பிரயோகம் செய்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில், அண்மையில் கைதுசெய்யப்பட்டார்.
இதேவேளை, ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமை பொலிஸ் விஷேட விசாரணைப் பிரிவில் முன்னிலையாக வேண்டும் எனவும் சரத்சந்திரவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

