கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை நாளை ஆரம்பமாகவுள்ளது.
ஏழு இலட்சம் பரீட்சார்த்திகள் இம்முறை பரீட்சைக்குத் தோற்றுவதற்காக விண்ணப்பித்திருந்ததாக பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாளை முதல் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நடைபெறவுள்ளது.
பரீட்சைக்குத் தோற்றவுள்ள விண்ணப்பதாரிகள், பரீட்சைக்கான அனுமதிப்பத்திரம், தேசிய அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டு ஆகியவற்றில் ஏதேனுமொரு அடையாள ஆவணத்தை எடுத்துவருது கட்டாயமாகும் என்றும் உதவிப் பரீட்சைகள் ஆணையாளர் எஸ்.பிரணவதாசன் குறிப்பிடுகின்றார்.

