நிஷாந்தவை எச்சரித்து விடுதலை செய்த நீதிமன்றம்




நபரொருவருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்ததாக குற்றம்சாட்டப்பட்ட இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் செயலாளர் நிஷாந்த ரணதுங்க கடும் எச்சரிக்கையின் பின்னர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 

கொழும்பு கிரிக்கெட் தலைவருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்ததாக கூறப்பட்டு நிஷாந்த ரணதுங்கவுக்கு எதிராக கறுவாத்தோட்டம் பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்தனர். 

இந்த வழக்கு இன்றைய தினம் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 

இதன்போது இரு தரப்பினரும் சமரசத்திற்கு இணங்கியதால், பிரதிவாதிக்கு எச்சரிக்கை விடுத்து நீதவான் கிஹான் பிலபிடிய விடுதலை செய்துள்ளதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.