(இஸ்மாயில் உவைசுர் ரஹ்மான்)
நேற்று வெளியான க.பொ.த (உ/த) பரீட்சை முடிவுகள் சிறந்த அறுவடை
நீண்ட கால இடைவெளியில் கிடைத்துள்ளது. 6 பேர் பொறியியல் பீடத்துக்கும், 5 போ் மருத்துவ பீடத்துக்குமென தெரிவாகும் வாய்ப்பு கனிந்துள்ளது.
கலை, முகாமைத்துவதும், இயந்திரவியல்,வணிகம், சட்டத்துறை, பொறியில் தொழில்நுட்பம் என பல் துறைகளுக்கும், அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லுாரி,ஆயிசா பாளிகா,அஸ் ஸிறாஜ் போன்றவற்றிலிருந்து, சுமார் 5O இற்கும் மேற்பட்டோர் பல்கலை செல்ல வாய்ப்புண்டு.
இதற்கென முழுவீச்சில் செயற்பட்ட மாணவர்கள், பெற்றோர்கள்,கல்விசார் சமூகத்தினர் அத்தனை பேரையும் #CEYLON24 வாழ்த்துகின்றது.
30 வருட ஆயுதப் போராட்டத்தில்
தோற்றவர்கள்-
ஐக்கிய நாடுகள் சபையினை-
முள்ளிவாய்க்கால் பக்கம்
திரும்பிப் பார்க்க வைக்க
கல்வியே காரணமாயிற்று.
அரசியல் வளமற்ற நேரமதில் விதைத்த மாணவ வித்துக்கள் நல்ல அறுவடையைத் 2016ல் தந்துள்ளனர்.
கட்டடங் கட்டுவதால்,
அடிக்கல் நடுவதால் மட்டும்
மாணவர்கள் சித்தியடைய முடியாது என்பது
இம் முறையும் கண்கூடு.
Water Supply, RDA, Habour இல் கை நிறையச் சம்பளம்.
கற்று உனக்கு என்ன பயன்? என்று, மக்களையும்,மாணவர்களையும், மாக்களாக்கி-
எமக்குப் Poster ஒட்டினால் போதும்-
கொடி பிடித்தால் போதும்-
துண்டுப் பிரசுரம் வினியோகித்தால் போதும் என்று
தங்களின், தமது குடும்பத்தின் வயிற்றுப் பிழைப்புக்காக-
அரசியல் செய்ய விளையும்
ஒவ்வொரு மகனுக்கும்-
இது பாடமாய் அமையட்டும்.
மாணவர்களை
பலிக் கடாவாக்கி-
பகடைக் காய்ககாக மாற்றி
பல்கலைப் படிப்பில்
வங்குரோத்துத் தனத்தை
உண்டு பண்ணியோருக்கும்
பாடமாக அமையட்டும்.
அரசியல் வேண்டும்
அபிவிருத்தி வேண்டும்.
ஆனால்-
அது-
தன் கட்சிக்காரா் தகமையற்றவராகினும்
அதிபராக்கினோம்.
மாற்றுக் கட்சிக்காரன்
SLEAS , SLPS பாஸ் பண்ணினாலும்,
அவர் செய்யமாட்டார் என்று
புதிய புராணம் இசைப்பதும்
முட்டாள் தனமான முடிவுகள்.
சிவில் சமூகம்-
காணும் இடங்களிலெ்லாம்
கல்விபற்றிக் கதைத்தது.
சன்மார்க்க அறிஞர்கள்
குத்பாப் பேருரைகளை
கல்வி பற்றிப்
பிரஸ்தாபித்தனர்,
இது இம் முறை
நல்ல வீச்சைத் தந்துள்ளது.
இறைவனிடம் கையேந்துவோம்!
இன்னுஞ் சிறப்பாக கல்விக் கண் வேகமாய்த் துடிக்க!

