(கிருதஞ்ஞன்)
இலங்கையின் ஜனநாயக சோசலிசக் குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நல்லாட்சி அரசினை உருவாக்கி இரண்டாண்டின் நிறைவினை முன்னிட்டு கௌரவ அமைச்சரவைத் தீர்மானத்தின்படி இன்று பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தில் தேசியக் கொடி ஏற்றப்பட்டு அலுவலக சுற்றாடல் சிரமதானத்தின் மூலம் துப்பரவு செய்யப்பட்டது.
பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி.ந.புள்ளநாயகம் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் வலயக் கல்விப் பணிப்பாளர் தேசியக் கொடியினை ஏற்றினார். அலுவலக பணியாளர்கள் இணைந்து தேசிய கீதத்தினைப் பாடினர். இதனைத் தொடர்ந்து அலுவலக பணியாளர்களினால் அலுவலகச் சுற்றாடல் சிரமதானத்தின் மூலம் துப்பரவு செய்யப்பட்டது.
இந் நிகழ்வில் பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள், சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்கள், முகாமைத்துவ உதவியாளர்கள், அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர்கள், அலுவலக உதவியாளர்கள் போன்றோர்; கலந்து கொண்டனர்.

