மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் மற்றும் பெண்களை வெளியேற்ற முயன்ற பொலிஸார் அவர்கள் மீது தடியடி நடத்தியுள்ளனர்.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்களின் ஆடைகளை பொலிஸார் கிழித்ததாக மாணவர்களை மேற்கோள்காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் இயற்ற வலியுறுத்தி சென்னை மெரினாவில் 7வது நாளாக இளைஞர்கள் மற்றும் பெண்கள் என லட்சக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்பகுதியில் நேற்று முதலே பொலிஸார் குவிக்கப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் இன்று காலை ஏராளமான பொலிஸார் அங்கு குவிக்கப்பட்டனர். அவர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது தடியடி நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பெண்கள், தாய்மார்கள் என்றும் பாராமல் பொலிஸார் கண்மூடித்தனமாக தடியடி நடத்தினர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் சிதறியோடியுள்ளனர்.
தடியடியோடு நிறுத்தாமல் பெண்கள் மீது கைவைத்து அவர்களின் ஆடைகளை கிழித்ததாக மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதில், ஒரு பெண்ணுக்கு தலை உடைந்து ரத்தம் பீரிட்டு வந்ததில் அவர் சுயநினைவு இழந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும்,
மேலும்,
இது மட்டுமல்லாது, மதுரை அலங்காநல்லூரிலும், போராட்டத்தை கலைக்க பொலிசார் தடியடி நடத்தி வயதான முதியவர்கள், பெண்கள் என கூட பார்க்காமல் தங்களது காட்டுமிராண்டி தனத்தினை வெளிபடுத்தியுள்ளனர்.
போலீஸார் தடியடி நடத்தியதில் பலர் காயமடைந்தனர், சிலர் மயங்கி விழுந்தனர். போலீஸார் அடித்ததில் போராட்டத்தில் கலந்துக்கொண்ட கர்ப்பிணி பெண்ணின் கரு கலைந்தது. தற்போது அந்த பெண்ணுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், அலங்காநல்லூரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் தாக்கினர். வயாதனவர்கள் என்றும் பாராமல் தடியடி நடத்தினர், மேலும் கல்வீச்சு நடத்தியதில் ஒரு பெண் காயமடைந்து மயங்கி விழுந்தார்.

