நூறுவருட நிறைவை முன்னிட்டு வெளியிடப்படும் இறுதி தபால் முத்திரை கொழும்பு விசாகா வித்தியாலயத்தினுடையது




நூறுவருட நிறைவை முன்னிட்டு வெளியிடப்படும் இறுதி தபால் முத்திரை கொழும்பு விசாகா வித்தியாலயத்தினுடையது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

இதன்பிறகு பாடசாலைகளின் நூறுவருட நிறைவை முன்னிட்டு முத்திரை வெளியிடப்பட மாட்டாது. கல்வி அமைச்சுக்கும், பாடசாலைகளுக்கும் இது தொடர்பில் அறிவித்தல் வழங்குமாறு தான் தபால் மா அதிபருக்கு தெரிவித்துள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் கூறினார்.

நாட்டிலுள்ள அனைத்து பிள்ளைகளுக்காகவும் இலவசக் கல்வியை வலுப்படுத்துவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.