முல்லைத்தீவு – கேப்பாப்புலவு, பிலக்குடியிருப்பில் காணி மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை தென்னிந்திய திரைப்பட நடிகர் தலைவாசல் விஜய் சந்தித்துள்ளார்.
இவர் கேப்பாப்புலவு போராட்டக்களத்திலுள்ள மக்களை இன்று காலை சந்தித்து அவர்களுக்கான ஆதரவை வெளிப்படுத்தியதோடு அம்மக்களுடனும் கலந்துரையாடியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கடல் குதிரைகள் திரைப்படத்தின் இசை வெளியீட்டுக்கு தென்னிந்திய திரைப்பட நடிகர் தலைவாசல் விஜய் வருகைத்தந்துள்ளார்.
இன்போதே மக்கள் போராட்டத்தை பார்வையிட்டு அவர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.
தமது சொந்த நிலங்களை விமானப்படையினரிடமிருந்து மீட்பதற்காக குறித்த பகுதி மக்கள் இன்றுடன் தொடர்ந்து 28 ஆவது நாளாக தமது போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
மேலும், தென்னிந்திய திரைப்பட நடிகர் தலைவாசல் விஜய் மற்றும் இயக்குனரும் ஈழ உணர்வாளருமான புகழேந்தி தங்கராஜ் ஆகியோர் குறித்த மக்களை நேரில் பார்வையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.