அரசியலமைப்பு பேரவை இன்று இரவு 09 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது
இதன்போது பிரதம நீதியரசர் நியமிப்பது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.
பிரதம நீதியரசர் கே. ஸ்ரீ பவன் இம்மாதம் 28 ஆம் திகதியுடன் ஓய்வு பெறவுள்ளார்.
பிரியஸாத் டெப் மற்றும் ஈவா வணசுந்தர ஆகியோர் தற்பொழுது உச்ச நீதிமன்றத்தில் உள்ள சிரேஷ்ட நீதிபதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
