இலங்கை அரசாங்கத்தினதும்,ஜப்பானிய நாட்டின் ஜெய்க்கா நிறுவனத்தின் நிதிப்பங்களிப்புடன் கட்டிமுடிக்கப்பட்ட களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் கட்டிடத்தொகுதியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திறந்து வைத்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் இரண்டாவது பெரிய மருத்துவமனையாக கருதப்படும் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கட்டிட தொகுதிகள் இன்று(1.2.2017 )புதன்கிழமை காலை 9.15 மணியளவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்துவைக்கப்பட்டது. ஜப்பான் அரசாங்கத்தின் ஜெய்கா திட்டத்தின் கீழ் 514 மில்லியன் ரூபா ஒதுக்கீடுசெய்யப்பட்டு நவீன முறையில் கட்டிட தொகுதிகளான இரத்த வங்கி, நவீன சத்திர சிகிச்சைக் கூடம், சட்ட வைத்திய பிரிவு, கதிர்வீச்சுப் பகுதி, நோயாளர்களின் தங்குமிட வசதி, நிர்வாகத்தொகுதி உட்பட பல்வேறு பகுதிகளைக்கொண்டதாக இந்த வைத்தியசாலை கட்டிட தொகுதி அமைக்கப்பட்டுள்ளதை நாடா வெட்டி திறந்து வைப்பதையும்,
திறப்பு விழாவில் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன், கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட், , கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம், சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ண இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி, பாராளுமன்ற உறுப்பினர்கள்,மாகாணசபை உறுப்பினாகள் என பலர் கலந்துகொண்டார்கள். இதன்போது வைத்தியசாலை அபிவிருத்தி குழுவினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களை பொன்னாடை போற்றி கௌரவிக்கப்பட்ட்டார்.

