2013 ஆம் ஆண்டு இடம்பெற்ற ரத்துபஸ்வல துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக 3 பேர் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் மூவரும் ராணுவத்தினர் என ராணுவ ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
குற்றவிசாரணை திணைக்களம் விடுத்த அறிவித்தலுக்கு அமைய முன்னிலையான குறித்த 3 ராணுவத்தினரும் கைது செய்யப்பட்டதாக ராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன தெரிவித்தார்.
கோப்ரல் ஒருவரும், செரயன் ஒருவரும் குற்றவிசாரணை திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
வெலிவேரிய, ரத்துபஸ்வல பிரதேசத்தில் செயற்பட்டு வந்த தொழிற்சாலை ஒன்று காரணமாக நிலத்தின் அடியில் நீரில் ரசாயனம் கலந்ததாக குற்றம்சுமத்தப்பட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.
அதன்போது அங்கு ஏற்பட்ட கலவரம் காரணமாக பொதுமக்களை அங்கிருந்து அகற்றுவதற்கு ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டனர்.
அந்த தருணத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தின் போது மூன்று பேர் கொல்லப்பட்டதுடன், மேலும் சிலர் காயமடைந்தனர்