ரஸ்ய ஜனாதிபதியுடன்



ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ரஸ்ய ஜனாதிபதி திமித்ரி மித்வதேவ் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று இடம்பெற்றுள்ளது. 

இன்று (24) மதியம் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது இலங்கை மற்றும் ரஸ்யாவுக்கு இடையிலான 60 வருட நல்லுறவை வலுப்படுத்தும் அடிப்படையில் எதிர்கால செயற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

1957 ஆம் ஆண்டு ஆரம்பமாக இருதரப்பு உறவுகள் பொருளாதாரம், வர்த்தக, கலாசார மற்றும் சில துறைகளில் வரையறையின்றி தொடர்ந்தும் விரிவாக்கப்படும் என இந்த கலந்துரையாடலின் போது இணக்கம் காணப்பட்டது. 

இலங்கை - ரஸ்ய உறவுகளுக்கு புதிய பக்கம் ஒன்றை புரட்டும் வகையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இருதரப்பு உறவுகளின் அனுகூலங்களை இலங்கை மக்களுக்கு வழங்குவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளதாக ரஸ்ய பிரதமர் திமித்ரி மெத்வதேவ் தெரிவித்துள்ளார் 

ரஸ்யாவுக்கு விஜயம் செய்வதற்கு 43 வருடங்களுக்கு பின்னர் இலங்கை ஜனாதிபதி ஒருவருக்கு அழைப்பு கிடைத்துள்ளமை இலங்கையர்களுக்கு கிடைத்த கௌரவம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்