வியாபார நிலையம் தீக்கிரை



-எஸ்.கார்த்திகேசு, வி.சுகிர்தகுமார்-
 திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில்-01 பிரதான வீதியில்  அமைந்துள்ள வியாபார நிலையமொன்று,  இன்று(24) அதிகாலை, தீக்கிரையாகியுள்ளதாக  திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர். தீவிபத்தினால் சுமார் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் மேலும் கூறினர். தம்பிலுவிலைச் சேர்ந்த சின்னத்தம்பி  கோபாலபிள்ளை என்பவரின்  வியாபார நிலையமே, இவ்வாறு எரிந்து நாசமகியுள்ளது. மின் ஒழுக்கே, தீ விபத்துக்கு  காரணமாக இருக்கலாமென பொலிஸார் தெரிவித்தனர்.