எங்களால் கொடுக்க முடியவில்லை. ஆனால் கொடுப்பவனையாவது கொடுக்கவிடுங்கள்



இந்த லைக்கா நிறுவனம் இடம்பெயர்ந்தவர்களுக்கு 150 வீடு கட்டிக் கொடுத்து, அதை வைத்து தன்னுடைய படத்தை பெரும் வியாபாரப்படுத்த நினைக்கிறது.
இது பெரும் நாடகம் என்று இங்கிட்டு கம்பு சுத்துர பயலுவ, வீடுகளை இழந்து பாதிக்கப்பட்டு, குடிசைகளில் வாடும் மக்களுக்கு ஒரு வீடு கட்டிக்குடுக்க வக்கேதும் இருக்கிறதா?
இங்கின நாங்க 2,3 அப்பியாச கொப்பி( note book) வாங்கிக் குடுத்திட்டு, நாற்பது படம் எடுத்து பப்ளிசிட்டி பண்ணும் போது, 22 கோடி ரூபா செலவில் 150 வீடுகளைக் கட்டிக்குடுக்கும் அவன் எவ்வளவு நினைப்பான்.?
லைக்கா நிறுவனம் மேல குற்றம் சாட்டுகிறவங்க 2/3 வீதத்தினர் குறைந்த அடிப்படை வசதிகள் கொண்ட வீட்டிலாவது வாழ்கிறீர்கள் என்பது நமக்கு தெரியும்.
எங்களால் கொடுக்க முடியவில்லை. ஆனால் கொடுப்பவனையாவது கொடுக்கவிடுங்கள்.
அவன் கோடி கோடியாய் சம்பாதிக்கட்டும். ஆனால் எதுவுமே இல்லாதவர்கள் கொஞ்சமேனும் அவன் மூலமேனும் நன்மையடைகிறார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.
இப்படி எவ்வளவோ விசையத்தை எதிர்த்து எதிர்த்து தான் இன்னமும் எங்கள் சனங்கள் மழைக்குள்ளேயும், வெய்யிலிலும் தவிக்குதுகள். மூடிட்டு உங்க வேலையை பாருங்கடா.