மீனவர்களுக்கு இலவச டப்லெட்



அரசாங்கத்தின் 149 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் 1,490க்கும் மேற்பட்ட மீனவர்களுக்கு டப்லெட் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடிக்கும் போது, அது தொடர்பான தரவுகளை உரிய முறையில் பதிவு செய்வதற்காகவே, இவ்வாறு டப்லெட் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சர்வதேசக் கடற்பரப்பில் பிடிக்கும் மீன்கள் தொடர்பில் சரியான தரவு பதிவு இன்மை என்ற காரணத்தால், இலங்கைக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியத்தினால் மீன் ஏற்றுமதிக்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. இதனைக் கருத்திற்கொண்டே, மீனவர்களுக்கு டப்லட் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

சர்வதேசக் கடற்பரப்பில் பிடிக்கப்படும் மீன்கள் தொடர்பில் துல்லியமான தரவுகளைப் பதிவு செய்வதற்குத் தேவைப்படும் பயிற்சியை, நாட்டு மீனவர்களுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக, கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. இவ்வாறு வழங்கப்படும் டப்லட்டுகளை கடினமான சந்தர்ப்பங்களிலும் பயன்படுத்த வேண்டும், குறிப்பாக தண்ணீரின் கீழும் கூட இந்த டப்லெட்டுகளுக்கு சேதம் இல்லாமல் வைத்திருக்க முடியும். மேலும், டப்லெட்டுகளில்  VMS- Vessel Monitoring System-ஐப் பொருத்தி மீன்பிடி படகுகளின் கண்காணிப்பு வசதிகளையும் பார்க்கக்கூடிய வகையில் அமையப்பெற்றுள்ளது.