(க.கிஷாந்தன்)
அட்டன் – நோட்டன்பிரிட்ஜ் பிரதான வீதியில் காசல்ரீ சமர்வில் பகுதியில் 02.04.2017 அன்று காலை பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததன் காரணமாக அவ்வீதியினூடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும் மரத்தை வெட்டி அகற்றுவதற்கு தற்பொழுது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். மேலும் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து தடைப்பட்டுள்ளதன் காரணமாக நோட்டன்பிரிட்ஜ் மற்றும் லக்ஷபான, ஒஸ்போன் போன்ற பிரதேசங்களுக்கு செல்லும் வாகனங்கள் பல சிரமங்களுக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடதக்கது

